மம்முட்டியின் மகன் தமிழில் அறிமுகமாகும் படத்தில் இசையமைக்கிறார் அனிருத்!!!

20th of October 2013
சென்னை::இந்நிலையில், பாலாஜி மோகன் தற்போது புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை தமிழில் அறிமுகப்படுத்துகிறார். துல்கர் சல்மான் தெலுங்கில் பிரபல ஹீரோவாக உள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கும் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘கொலவெறி’ புகழ் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். சௌந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். ரேடியன்ஸ் மீடியாவுடன் இணைந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தமிழ் மற்றும் மலையாளத்தில் இப்படத்தை எடுக்கவிருக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் முடிவு செய்துள்ளனர். 
சித்தார்த், அமலாபால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘காதலில் சொதப்புவது எப்படி?’. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியிருந்தார். குறும்பட இயக்குனரான பாலாஜி மோகன் தனது முதல் படத்திலேயே திறமையான இயக்குனர் என பெயரெடுத்தார்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments