சிம்பு படத்தில்: தனுஷ் பாடல்!!!

30th of October 2013
சென்னை::எலியும் பூனையுமாக இருந்த சிம்பு - தனுஷ் தற்போது பூவும் நாறுமாக இருக்கிறார்கள். தங்களது படங்களில் இடம்பெறும் வசனங்கள் மூலம் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக்கொண்ட இவர்கள், தற்போது அனைத்தையும் மறந்து,  பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்வது, ஒருவருக்கொருவர் கட்டி தழுவிக்கொள்வது என்று இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு தங்களது நட்பை வளர்த்து வருகிறார்கள்.

இந்த நட்பின் வளர்ச்சியை உலகிற்கு உரக்க சொல்லும் விதமாக, சிம்பு நடிக்கும் புதிய படத்தில் தனுஷ் ஒரு பாடலைப் பாடப்போகிறாராம்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடல் பாடுமாறு தனுஷிடம் சிம்பு கேட்டாராம். அதற்கு தனுஷ் உடனே ஓகே சொல்லி, பாட சம்மதித்துள்ளார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments