உடம்பை குறைச்சிடேன் சான்ஸ் கொடுங்க: நமீதா!!!

29th of October 2013
சென்னை::கல்யாணம், காதுகுத்து, ஜவுளிக்கடை, நகைக்கடை திறப்பு. ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர தூதர், டி.வி.நிகழ்ச்சி நடுவர் என நமீதா பிசியாக இருந்தாலும் கையில் படங்கள் இல்லை. மங்கை அரிராஜன் வருடக் கணக்கில் இயக்கி வரும் இளமை ஊஞ்சல் என்ற படம் மட்டுமே நமீதா கையில் இருக்கிறது. அதிலும் 5 ஹீரோயின்களில் ஒருவர்தான்.
ஒரு நாளைக்கு 12 மணிநேரம் ஜிம்முக்கு போகிறார். முழுநேர டயட்டில் இருக்கிறார். மருத்துவர்களை கலந்தாலோசித்து சில சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டார். அப்படி இருந்தும் வெயிட் லூசாகவில்லை. சரி இனி உடம்புக்கு ஏற்ற கேரக்டரில் நடிப்போம் என்று முடிவு செய்து சமீபத்தில் அவர் தனியாக எடுத்துக் கொண்ட போட்டோக்களை தன் மானேஜர் மூலம் மீடியாக்களுக்கு அனுப்பி உள்ளார்.

வெயிட் குறைத்திருக்கிறாரா என்று ரசிக பெருமக்கள் சொல்லட்டும், அவருக்கேற்ற கேரக்டர் இருந்தால் டைரக்டருங்க புரட்யூசருங்க சொல்லட்டும்.  

Comments