கோவாவில் சர்வதேச திரைப்பட விழா: "தங்க மீன்கள்' திரையிடப்படுகிறது!!!

16th of October 2013
சென்னை::கோவாவில் நடக்கும், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, தமிழில் இருந்து, "தங்க மீன்கள்' படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

கற்றது தமிழ்' படத்தை இயக்கிய ராம், "தங்க மீன்கள்' படத்தை, நடித்து, இயக்கியுள்ளார். ஜே.எஸ்.கே., பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்து உள்ளது. கோவாவில், 44வது சர்வதேச திரைப்பட விழா, நவ., 10ம் தேதியில் இருந்து, 20ம் தேதி வரை நடக்கிறது. இதில், "இந்தியன் பனோரமா' பிரிவில், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, ஆங்கிலம் உட்பட, 26 படங்கள் திரையிடப்பட உள்ளன.

இவ்விழாவில் திரையிடப்பட, தமிழில் இருந்து, "தங்க மீன்கள்' படம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, "தங்க மீன்கள்' பட இயக்குனர் ராம் கூறும்போது, ""இப்படம், 18வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது,'' என, தெரிவித்தார்.

Comments