28th of October 2013
சென்னை::ஐஸ்வர்யா ராயை போட்டோ எடுக்க முயன்ற மீடியாவினரை அவரது மாமியார் ஜெயா பச்சன் கடிந்து கொண்டார். ‘ஐஸ்வர்யான்னு எப்படி கூப்பிடலாம், அவர் என்ன உங்க கிளாஸ்மெட்டா என்று கோபமாக கேட்டார்.சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் ஐஸ்வர்யா ராய் அவரது மாமியார் ஜெயா பச்சன் கலந்துகொண்டுவிட்டு புறப்பட்டனர்.
அப்போது வழியில் கேமராவுடன் நின்றிருந்த போட்டோகிராபர்கள், மீடியாக்காரர்கள் ஐஸ்வர்யா ராயை அழைத்து போஸ் கொடுத்துவிட்டு செல்லும்படி கேட்டனர். இதைப்பார்த்து அருகில் இருந்த ஜெயா பச்சன் கோபம் அடைந்தார். போட்டோகிராபர்கள், மீடியாக்காரர்களை பார்த்து திட்டத் தொடங்கினார்.
ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா என்று பேர் சொல்லி எப்படி கூப்பிடலாம். அவர் என்ன உங்களோட கிளாஸ்மெட்டா? இன்னொருமுறை அவரை அப்படி கூப்பிடாதீர்கள். அவரது முழுபெயர் ஐஸ்வர்யா ராய் பச்சன். இனிமேல் எப்போது கூப்பிடும்போதும் இப்படித்தான் முழுபெயரையும் சொல்லி கூப்பிட வேண்டும் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment