இயக்குனர்களுக்கு துாஆண்ட்ரியா அதிரடி!!!

21st of October 2013
சென்னை::விஸ்­வ­ரூபம்’ படத்­திற்கு பின், கோலி­­­வுட்டின் முன்­னணி ஹீரோக்­க­ளுடன், நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்­பார்த்த ஆண்ட்­ரி­யா­வுக்கு, பலத்த ஏமாற்­றமே மிஞ்­சி­யது. தற்­போது, ‘தர­மணி மற்றும்  அரண்­மனை’ உட்­பட சில படங்­களில் நடிப்­பவர், முன்­னணி  ஹீரோக்­களின் பட  வாய்ப்­பு­களை பிடிப்­ப­தற்­காக, சில பிர­பல இயக்­கு­னர்­களை சந்­தித்து வரு­கி­றாராம்.
 
விஸ்­வ­ரூபம் –2வில் இது­வரை நடிக்­காத,  வெயிட்­டான ரோலில் நடிக்­கிறேன். அதனால், அப்­ப­டத்தில் என் நடிப்புத் திற­மையை பார்த்து விட்டு, வாய்ப்பு கொடுங்கள்’ என, கேட்டு வரு­கி­றாராம். இதற்­கி­டையே, மலை­யாள நடிகர் பகத் பாசி­லுடன் ஏற்­பட்ட காதல் சர்ச்சை ஓய்ந்து விட்­டதால், மீண்டும் மலை­யாள சினி­மாவில் நடிப்­ப­தற்­கான முயற்­சி­க­ளிலும் ஈடு­பட்­டி­ருக்கும் ஆண்ட்­ரியா, ‘என் வயதை  மீறிய முதிர்ச்­சி­யான வேடம் கொடுத்­தாலும், நடிக்க தயா­ராக இருக்­கிறேன்’ என்று அங்­குள்ள டைரக்­டர்­க­ளி­டமும், பட வேட்­டையில் ஈடு­பட்­டுள்ளார்.

Comments