இயக்குநர் ‘ஜெயம் ராஜா’ நடிகர் ஆனார்!!!

14th of October 2013
சென்னை::தம்பி ஜெயம் ரவியை ஊரறிந்த ஹீரோவாக மாற்றிய அவரது அண்ணன் இயக்குநர் ஜெயம் ராஜா, இப்போது தானும் நடிகராகி விட்டார். ஆனால், தம்பிக்குப் போட்டியாக ஹீரோவாக அல்ல..!

அவர் முக்கிய கேரக்டர் ஏற்கும் படம், ‘என்ன சத்தம் இந்த நேரம்’. இந்தப்படத்தின் புதுமையான கதை அமைப்பைக் கேட்ட அவர், இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். அப்படி என்ன புதுமை..?

இரட்டையர் கதை போல, ஒரே பிரசவத்தில் பிறந்த நால்வரைப் பற்றிய கதை இது. படத்திலும் ஒன்றாகப் பிறந்த நால்வரான அதிதி, ஆக்ரதி, அக்க்ஷதி, ஆப்தி என்ற எட்டு வயது சிறுமிகள் நால்வர் நடிக்கிறார்கள். இது உலகிலேயே முதல் முயற்சி.

நிதின் சத்யாவும், மாளவிகா வால்வ்ஸும் முக்கிய வேடங்கள் ஏற்க, இவர்களுடன் புரவலன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, சிவ ஷங்கர், வையாபுரி, லொள்ளுசபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ‘காதல் மன்னனி’ல் அஜித்துடன் நாயகியான ‘மானு’ 15 வருடங்களுக்குப் பின் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

சஞ்சய் பி.லோகநாதன் ஒளிப்பதிவைக் கவனிக்க, ஜான் மகேந்திரன் வசனத்தை எழுத, இசையமைக்கிறார் மரகதமணியின் சகோதரர் நாகா.
இந்தப்படத்தின் இயக்குநர் குரு ரமேஷ், சுரேஷ் கிருஷ்ணாவிடம் சினிமாவைக் கற்றவர். பெரும்பாலும் மிருகக் காட்சி சாலைக்குள் படமாக்கப்பட்ட ‘என்ன சத்தம் இந்த நேரம்’, சென்னை, ஹைதராபாத்தில் முதல், இரண்டாம் ஷெட்யூல்களை முடித்து சென்னையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Comments