28th of October 2013
சென்னை::தீபாவளிக்கு அஜீத்தின் 'ஆரம்பம்', கார்த்தியின் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா', விஷாலின் 'பாண்டிய நாடு' படங்கள் மோதுகின்றன. மூன்றுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
'ஆரம்பம்' படம் தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்னதாக வருகிற 31–ந் தேதி ரிலீசாகிறது. தியேட்டர்களில் இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. முதல் நாளிலேயே ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
'ஆல் இன் ஆல் அழகுராஜா' படமும், 'பாண்டியநாடு' படமும் 2–ந்தேதி தீபாவளியன்று வெளியாகிறது. 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்துக்கும் ஒரு வாரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
பாண்டிய நாடு படத்துக்கு நாளை முதல் டிக்கெட் முன்பதிவு நடக்கிறது. 'ஆரம்பம்' படம் சென்னையில் 30 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா, டாப்சியும் இன்னொரு ஜோடியாக வருகிறார்கள். ஆக்சன் படமாக தயாராகியுள்ளது. விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார்.
'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். சந்தானமும் உள்ளார். காதல், காமெடி படமாக தயாராகியுள்ளது. ராஜேஷ் இயக்கியுள்ளார்.
'பாண்டிய நாடு' படத்தில் விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கியுள்ளார். விஷாலே இப்படத்தை தயாரித்து உள்ளார். குடும்ப சென்டிமென்டுடன் கூடிய ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்தது. விஷால் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பி 'யு' சான்று பெற்றுள்ளார்.

Comments
Post a Comment