அடியாத்தீ…நம்ம ‘மயிலு’ மொவலா இது??!!!

5th of October 2013
சென்னை::முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஹீரோயின் வேடம் கட்ட தயாராகி விட்டார் போலும். மும்பையில் நடந்த விழா ஒன்றில் முன்பை விட படு தெளிவான அழகுடன், வித்தியாசமான கெட்டப்புடன் தனது தாயாருடன் வந்திருந்தார் ஜான்வி.
ஸ்ரீதேவியே இன்னும் கவர்ச்சியுடன் வலம் வரும்போது அவரது மகளும் நடிக்க வரப் போவதாக ஏற்கனவே ஒரு பேச்சு உள்ளது. இந்தப் பேச்சுக்களை உறுதிப்படுத்துவது போல இருந்தது ஜான்வியின் புதுத் தோற்றம்.
ஸ்ரீதேவி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்காக கொடுத்த போஸ்கள் அட்டகாசமாக இருந்ததோடு, அவரது கிரேஸ் இன்னும் குறையவில்லை என்பதையும் வெளிக்காட்டியது.
இன்னும் அழகு குலையாமல் ஸ்ரீதேவி பட விழாக்களுக்கும், பிற நிகழ்ச்சிகளுககும் வந்து போவதும், சின்னப் பெண் கணக்காக டிரஸ் போட்டுக் கலக்குவதும் அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி. இவரும் அம்மா வழியி்ல் நடிக்கப் போவதாக பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது. முன்பு ரொம்பச் சின்னப் பெண்ணாக காட்சி தந்தார் ஜான்வி. ஆனால் தற்போது தாயாரைப் போலவே அவரும் அழகாக மாறியுள்ளார்.
முன்பு இருந்ததைப் போல இல்லாமல், தெளிவான முகத்துடனும், திருத்தமான டிரஸ்ஸிங் சென்ஸுடனும், புதிய ஹேர்ஸ்டைலுடனும் காட்சி தருகிறார் ஜான்வி.
ஜான்வியைப் பார்த்தவர்கள், அடடா ஸ்ரீதேவி பொண்ணு சீக்கிரமே நடிகையாகப் போகிறது போல என்று பேசிக் கொண்டதைக் காண முடிந்தது.
ஜான்வி இப்போதெல்லாம் தனது உடல் நலனிலும், பொலிவிலும் கூடுதல் அக்கறை காட்டுகிறாராம். ஜிம்முக்குப் போகிறாராம், டயட்டைக் கடைப்பிடிக்கிறாராம்.
முன்பு பார்க்க குச்சி மாதிரி இருந்தார். இப்போது பூசினாற் போல மாறியுள்ளார். பார்க்கலாம், அம்மாவைப் போல ஜான்வியும் நடிப்பு அவதாரம் எடுப்பாரா என்று… 

Comments