29th of October 2013
சென்னை::ரொமான்டிக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என மகன் கவுதமுக்கு ஐடியா கொடுத்தார் கார்த்திக்.நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் நடிக்கும் புதிய படம் ‘என்னம்மோ ஏதோ. பிரியதர்ஷன் உதவியாளர் ரவி தியாகராஜன் டைரக்டு செய்கிறார். பி.ரவிகுமார், பி.வி.பிரசாத் தயாரிக்கின்றனர். டி.இமான் இசை. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு. இப்படத்தில் நடிப்பது பற்றி கவுதம் கார்த்திக் கூறியதாவது:
காதல் ரோமியோவாக இப்படத்தில் வலம் வருவதுடன் காமெடியாகவும் நடிக்க முயற்சித்திருக்கிறேன். ஹீரோயினாக நடிக்கும் ரகுல் பிரீத் சிங், நிகிஷா பட்டேல் இருவருடனும் காதல் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஹீரோயின்களுடன் காதல் காட்சிகளில் நடிக்கும்போது எனக்கு பயமாக இருக்கும். இது பற்றி அப்பா கார்த்திக்கிடம் கூறினேன். உடனே அவர், ஷூட்டிங்கில் ஹீரோயின்களை காதலிக்கும்போது பயப்படாதே. இதுதான் உனக்கு முதல் பாடம் என்றார்.
அன்றுமுதல் நெருக்கமாக நடிக்கவோ, காதலிக்கவோ பயப்படுவதில்லை. என் அப்பாவின் நண்பர் பிரபுவுடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன். மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘கடல் படம் தோல்வி அடைந்ததால் இயக்குனர் மீது கோபமா என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. மணிரத்னம் மூலம் அறிமுகமானது பெருமை. முதல்படமே எனக்கு நடிப்பில் நல்ல பெயர் வாங்கி தந்தது என்றார்.
Comments
Post a Comment