வீரம் கேப்பில் கனடா டூர் செல்லும் அஜீத்!!!

20th of October 2013
சென்னை::ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் நடித்துள்ள படம் ஆரம்பம். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது. அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் இன்னொரு படம் வீரம். இப்படம் பொங்கலுக்கு வெளியாவதும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதனால் இரண்டு கட்ட படப்பிடிப்புகளில் நடித்து முடித்து விட்டார் அஜீத்.

இதனால் கடந்த சில வாரங்களாகவே ஓய்வில் இருக்கிறார் அஜீத். அதை பயனுள்ளதாக்கிக்கொள்ளத்தான் சமீபத்தில் தனது பைக்கில் புனேயில் இருந்து சென்னைக்கு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார். அதையடுத்து, படப்பிடிப்பு நடைபெற இன்னும் சில வாரங்கள் இருப்பதால்,  கனடாவுக்கு டூர் செல்ல இருக்கிறார் அஜீத்.

ஆனால், தனது மனைவி, குழந்தையுடன் செல்லவில்லையாம். ஆரம்பம் படத்தை இயக்கியுள்ள விஷ்ணுவர்தன், மங்காத்தாவை இயக்கிய வெங்கட்பிரபு பிரியாணியை இயக்கி விட்டு ஓய்வாக இருந்ததால் அவரையும் கூட்டணி சேர்த்துக்கொண்டு சென்றுள்ளாராம். ரிலாக்சுக்காக சென்றாலும், சுற்றிப்பார்க்கிற சாக்கில் நல்ல லொகேசன்களையும் தேடிப்பிடிக்க சென்றிருக்கிறார்களாம்.

Comments