கர்நாடக இசைக் குறித்து பாம்பே ஜெயஸ்ரீயிடம் கேள்வி கேட்ட ரசிகர்கள்!!!

2nd of October 2013
சென்னை::இந்திரா சிவசைலம் அறக்கட்டளை சார்பில், சென்னையில் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 'அன்வேஷா' என்ற தலைப்பில்  (செப்.30) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரபல கர்நாடக இசை பாடகியும்,

இந்திரா சிவசைலம் அறக்கட்டளையின் வருடந்திர நிகழ்ச்சி வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு முன்பு, 'அன்வேஷா - குவெஸ்ட் ஃபார் தி பெஸ்ட்' என்னும் கர்நாடக இசை ஆர்வலர்களுக்கான போட்டி, நேற்று (செப்.30) சென்னையில் நடத்தப்பட்டது.

இப்போட்டியின் வழியாக, ரசிகர்கள் கர்நாட்க இசை குறித்து தங்களது மனம் கவர்ந்த இசை கலைஞரும் மற்றும் இந்த ஆண்டின் இந்திரா சிவசைலம் விருதினை பெற இருப்பவருமான, பிரபல பாடகி திருமதி.பாம்பே ஜெயஸ்ரீ அவர்களோடு ஒரு கேள்வி பதில் அமர்வில் பங்கேற்பதை சாத்தியமாக்கியது.

பல்வேறு வயதினைச் சேர்ந்தவர்களும் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்களும் இந்த போட்டியில் பங்கேற்றனர். இசை வடிவங்கள், ராகங்கள் குறித்த ஆழமான புரிதல் மற்றும் வெவ்வேறு இசைக்கோர்வைகள் மற்றும் தாள கணக்கீடுகள், பாவங்கள் மற்றும் ஆன்மீகத்தன்மை குறித்த சுருக்கங்கள் என கர்நாடக இசையில் நுட்பமாக அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் அமைக்கப்பட்டன.

கர்நாடக இசை ரசிகர்களும் மற்றும் ஆர்வலர்களும் குழுமியிருந்த இந்த நிகழ்ச்சியில், பாம்பே ஜெயஸ்ரீ, 25க்கும் மேற்பட்ட முதன்மையான கேள்விகளுக்கு பதிலளித்ததோடு, இத்தகையதொரு முதன்முயற்சியை மேற்கொண்டதற்காகவும் மற்றும் மக்களிடம் கர்நாடக இசையின் பெருமையை பரப்ப உதவியதற்காகவும், இந்திரா சிவசைலம் அறக்கட்டளைக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

மியூசிக் அகாடமியின், அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆஃப் கர்நாடிக் மியூசிக்கின் ஆசிரியர்கள் ரிதா ராஜன் மற்றும் முனைவர் ஆர்.எஸ்.ஜெயலஷ்மி ஆகியோர் கேள்விகளை மதிப்பீடு செய்தனர். கர்நாடக இசையின் பாரம்பரிய மற்றும் தொழில்நுட்ப அம்சங்களின் மீது அதிக கூர்நோக்கம் கொண்டிருக்கும் வகையிலான கேள்விகள் மதிப்பீடு செயல்முறையில் கருத்தில் கொள்ளப்பட்டு சிறந்த கேள்விகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
திரைப்பட பின்னணி பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீயிடம், கர்நாடக இசைக் குறித்த கேள்விகளை ரசிகர்கள் கேட்டனர்.

Comments