23rd of October 2013
சென்னை::பாண்டிய நாடு' படத்துக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விஷால், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம் பாண்டிய நாடு. விஷாலின் பிலிம் பேக்டரி தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளி சரவெடியில் வெடிக்க தயாராக உள்ளது. படத்தின் எல்லா வேலைகளும் முடிவடைந்து 'பாண்டிய நாடு' சென்சாருக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில் படத்தில் வெட்டு, குத்து காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி சென்சார், யு&ஏ சான்றிதழ் வழங்கியது.
ஆனால் பட தயாரிப்பாளரான விஷால் இதை ஏற்கவில்லை. தனக்கு யு சான்றிதழ்தான் வேண்டும் என்றார். அதற்கு இரண்டு காரணம் உள்ளது. யு சான்றிதழ் மட்டும் கிடைத்தால்தான் அரசின் வரி விலக்கு கிடைக்கும். தீபாவளிக்கு திரைக்கு வரும் மற்ற 2 படங்களான 'ஆரம்பம்', 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஆகியவை யு சான்றிதழ் பெற்றுள்ளன.
இதனால் தனது படத்துக்கு பின்னடைவு ஏற்படலாம் என விஷால் கருதுகிறார். இதனையடுத்து படத்தை மறு தணிக்கை செய்ய விண்ணப்பித்துள்ளனர். இதற்கு முன்னதாக விஷாலின் மதகதராஜா திரைப்படம் சர்ச்சையில் சிக்கி வெளியாகமால் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment