19th of October 2013
சென்னை::தற்போது புதுப்படங்களில் நடிப்பதை நடிகை திரிஷா மறுத்து வருகிறாராம். ஏன் என்று விசாரித்ததில், அடுத்த வருடம் தொடக்கத்திலேயே அவர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளாராம்.திரிஷாவுடன் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. எனவே திரிஷாவுக்கு
எனவே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தெலுங்கு, தமிழ்பட உலகில் செய்திகள் பரவி உள்ளன. இதனை இருவரும் மறுக்கவில்லை. இந்த நிலையில் புதுப்படங்களில் நடிப்பதை திரிஷா தவிர்க்கிறார். பல இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்கும்படி அவரை அணுகிய போது மறுத்துவிட்டாராம்.
தற்போது ஜெயம்ரவி ஜோடியாக பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை மற்றும் தெலுங்கில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கிறார். இதில் பூலோகம் முடிந்துவிட்டது. மற்ற படங்களையும் முடித்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறார். அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் திருமணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ம் விரைவில் திருமணத்தை முடிக்க அவரது தாய் மாப்பிள்ளை தேடிவந்தார். இதற்கிடையில் திரிஷாவையும் தெலுங்கு நடிகர் ராணாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வந்தார்கள். குடும்ப நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்கள். சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த பட விழாவுக்கு ஜோடியாக சென்று நெருக்கமாக நடனமாடிய படங்கள் இன்டர்நெட்டில் பரவின.
Comments
Post a Comment