15th of October 2013
சென்னை::தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையத்திற்கு சூர்யா 6 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
கோவை மாவட்டம் சூளூரில் தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி மையம் (டேங்கர் பவுன்டேஷன்) சார்பில் ஆர்விஎஸ்
மருத்துவமனையில் இலவச டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை நடிகர் சூர்யா திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் போது சூர்யா டயாலிசிஸ் இயந்திரங்கள் வாங்க ரூ.6 லட்சம் நன்கொடையாக வழங்கினார். டேங்கர் பவுன்டேஷன் கடந்த 1993ம் ஆண்டு துவங்கப்பட்டது.
இந்த பவுன்டேஷன் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment