31st of October 2013
சென்னை::‘3’, ‘எதிர்நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுத்த அனிரூத் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக ஆகிவிட்டார். இவருக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இருந்தாலும், தொடர்ந்து படங்களை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார்.
இவர் தற்போது சிவ
கார்த்திகேயன் நடிக்கும் ‘மான் கராத்தே’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’, விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதுப்படம் உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பாலாஜி மோகன் இயக்கும் ‘வாய் மூடி பேசவா’, மம்முட்டி மகன் துல்கர் சல்மான், நஸ்ரியா இணைந்து தமிழில் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்த இருபடங்களிலிருந்தும் தற்போது அனிரூத் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்களிடமிருந்து வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பெயருக்கு அதிக படங்களில் இசையமைக்கிறேன் என்றில்லாமல், குறிப்பிட்ட படங்களில் இசையமைத்து சிறந்த இசையமைப்பாளர் என பெயரெடுக்க வேண்டும் என்பதனாலேயே இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறுப்படுகிறது. குறைந்தது 6 தயாரிப்பாளர்களிடம் இவர் வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

Comments
Post a Comment