ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியானார் ஸ்ரீதிவ்யா!!!

17th of October 2013
சென்னை::ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கப்போகிறாராம் ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா.
 
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக அறிமுகமாகும் படம் பென்சில். அவர் நடிக்கும் படத்துக்கு பென்சில் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை மணி நாகராஜ் இயக்குகிறார். இவர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். நாயகனாக நடிப்பது மட்டுமின்றி படத்தின் இசை அமைப்பாளரும் ஜி.வி. தானாம். படத்தில் மொத்தம் 4 பாடல்கள்.
இப்படம் காதல், திரில்லர் படமாக தயாராகிறது.
 
இதில் ஜி.வி.பிரகாஷ் 12–வது வகுப்பு மாணவன் கேரக்டரில் வருகிறார். படத்தில் ஜி.விக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கப் போகிறார் என செய்திகள் பரவின. ஆனால், அது உண்மை இல்லையாம். 'ஊதா கலரு ரிப்பன்' ஸ்ரீதிவ்யா தான் ஜோடியாம்.
 
பீட்சா படத்தின் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

Comments