இந்தி திரையுலகின் முன்னாள் கனவுக்கன்னி ஹேமமாலினியுடன் இணையும் பாடகர் ஷங்கர் மகாதேவன்!!!

6th of October 2013
சென்னை::இந்தி திரையுலகின் முன்னாள் கனவுக்கன்னி ஹேமமாலினி. இப்போதும் நாட்டிய நாடகங்களை தயாரித்து வழங்கி வருகின்றார். சமீபத்தில் அவர் சவுந்தர்ய லஹரியை இசை ஆல்பமாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த முயற்சியில் அவருடன் சுரேஷ் வட்கர், ஷங்கர் மகாதேவன், அஷிட் தேசாய் போன்றோர் இணைந்து பணியாற்றுகின்றனர். இந்தத் தகவலை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஹேமமாலினி ரசிகர்களின் ஆதரவினை எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.

இயக்குநர் கே.எம். சைத்தன்யாவின் இயக்கத்தில் வெளிவந்த 'பராரி' கன்னட படத்தில் ஒரு பாடலுக்கு பாடியதன்மூலம் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடகராகத் திரையுலகில் நுழைந்தார். இவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை முதன்முறையாக பெற்றார். அதன்பின்னர் கடந்த 1998 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட 'பிரெத்லெஸ்' ஆல்பம் மூலமாக இசையமைப்பாளராக மாறினார். ஷங்கர், எசன், லாய் என்ற மூவர் கூட்டணியில் தற்போது இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். கமலஹாசனின் ‘ஆளவந்தான்’, ‘விஸ்வரூபம்’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது கமலின் ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments