17th of October 2013
சென்னை::சூர்யா படத்துக்கு முதல் முறையாக ரெட் டிராகன் டிஜிட்டல் கேமரா பயன்படுத்தப்படுகிறது. ‘சிங்கம் 2 படத்தையடுத்து லிங்குசாமி, கவுதம் மேனன் படங்களில் நடிக்க முடிவு செய்திருந்தார் சூர்யா. கவுதம் மேனன் சொன்ன ஸ்கிரிப்ட் பிடிக்காததால் அப்படத்தில் இருந்து விலகினார். முன்னதாக இப்படத்துக்காக வாங்கி இருந்த ரூ.5 கோடி அட்வான்சை திருப்பி கொடுத்துவிட்டார். கவுதமுக்கு டாடா காட்டிய கையோடு, லிங்குசாமி ஷூட்டிங் தொடங்க கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார் சூர்யா.
சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு, சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை லிங்குசாமி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் உலகிலேயே முதன் முறையாக ‘ரெட் டிராகன்’ என்னும் கேமிராவை பயன்படுத்தி படமாக்குகிறார்கள்.
தமிழில் ரெட் ஒன் வகை கேமிராக்கள் சில வருடங்களாகவே பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், தற்போது நவீன தொழில்நுட்பத்தோடு வெளிவந்துள்ள இந்த ரெட்-டிராகன் டிஜிட்டல் கேமிராவை இப்படத்தில் பயன்படுத்தவுள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன். ஏற்கெனவே இவர், துப்பாக்கி படத்திற்காக ஆரி அலெக்ஷா எனும் கேமராவை இந்திய சினிமாவில் முதன் முறையாக பயன்படுத்தினார்.
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ‘ரெட் டிராகன்’ கேமிராவை வைத்து டெஸ்ட் ஷுட் செய்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர் குழுவினர். நவம்பர் 15 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. மே, 2014ல் இப்படம் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தை லிங்குசாமியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்தில் இரண்டுவித தோற்றத்தில் நடிக்கிறார்.இதுபற்றி லிங்குசாமி கூறும் போது, ‘இப்படத்தில் சூர்யா இரண்டு வித தோற்றத்தில் வருகிறார். ஒரு தோற்றத்துக்காக தாடி வளர்க்கிறார். தவிர மேலும் 2 தோற்றங்களில் நடிக்க உள்ளார். அடுத்த மாதம் மும்பையில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளது என்றார். இப்படத்துக்காக ரெட் டிராகன் டிஜிட்டல் என்ற புதுவகை கேமரா பயன்படுத்தப்படுகிறது. உலகிலேயே முதல் முறையாக இந்த கேமரா தமிழில்தான் பயன்படுத்தப்படுகிறது என்றார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.
Comments
Post a Comment