16th of October 2013
சென்னை::சித்தார்த்தை சமந்தா காதலிப்பதாக வரும் செய்திகள் இப்போது அடுத்தக்கட்ட பரிமாணத்தை எட்டியிருக்கின்றன. சமந்தாவுக்கும், சித்தார்த்துக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதனை சமந்தா மறுத்துள்ளார்.
எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும் அது ரகசிய திருமணமாக இருக்காது. அனைவாpடமும் வெளிப்படையாக அறிவித்துவிட்டே திருமணம் செய்வேன் என்றார்.
தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா ஜhடியாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஜோடியாகவும் இரு படங்களில் சமந்தா நடிக்க உள்ளார்.
தெலுங்கில் அவர் நடித்த ராமையா வஸ்தாவையா சென்றவாரம் வெளியானது. விக்ரம் கே.குமாரின் மனம் படத்தில் நாக சைதன்யா
ஜோடியாக நடித்து வருகிறhர். தெலுங்கில் மனம் தவிர்த்து ஒரேயொரு படத்துக்கு மட்டுமே கால்ஷீட் தந்திருக்கிறேன். கதை எனக்குப் பிடித்தால் மட்டுமே வேறு படங்களில் நடிப்பேன் எனவும் சமந்தா தெரிவித்தார்.
Comments
Post a Comment