10th of October 2013
சென்னை::மலையாள சினிமாவில் உள்ள பல நடிகைகள் பின்னணி பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ரம்யா நம்பீசன் ,காவ்யா மாதவன் உள்ளிட்ட சிலர் தாங்கள் நடிக்கும் படங்களிலேயே பாடி வருகின்றனர். இந்த வரிசையில் சேர ஆசைப்படுகிறார் நஸ்ரியா.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நான் அறிமுகமான காலகட்டத்திலேயே கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுக்கொண்டேன்.
அதனால் சினிமா பாடல்கள் பாட வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாட்களாய் எனக்குள் இருந்து வருகிறது.
ஆனால் இதுவரை எனது ஆர்வத்தை எவரிடமும் நான் வெளிப்படுத்தவில்லை. இப்போது கதாநாயகி ஆகி விட்டதால், எனக்கு நானே சொந்தக்குரலில் பாட வேண்டும் என்ற ஆசை அதிகரித்திருக்கிறது.
அதனால் இனி இசையமைப்பாளர்களிடம் எனது விருப்பத்தை தெரியப்படுத்துவேன். எனக்காக மட்டுமின்றி, மற்ற நடிகைகளுக்காக பாட வேண்டும் என்று சொன்னாலும் பாடிக்கொடுப்பேன்” என்கிறார் நஸ்ரியா.
Comments
Post a Comment