15th of October 2013
சென்னை::பாண்டியநாடு படத்தில் விஷால் திக்கு வாய் கேரக்டரில் நடித்துள்ளார்.
விஷால் நடித்து தயாரிப்பாளராக அறிமுகமாகும் திரைப்படம் பாண்டிய நாடு. மதுரையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து , தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், நடிகைகள் குஷ்பு, லட்சமிமேனன், ரம்யாநம்பீசன், இயக்குனர்கள் எழில், ஹரி, சமுத்திரக்கனி, சீனு ராமசாமி, பாண்டிராஜ், கண்ணன், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, ஜி.கே.ரெட்டி, விக்ரம்கிருஷ்ணா, வேந்தர் மூவிஸ் மதன் நடிகர்கள் விக்ராந்த், சூரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய விஷால், "தயாரிப்பாளர் ஆகனும் என்ற எண்ணம் எனக்கு இரவு 12 மணிக்குத் தான் தோனுச்சு, உடனே என் அண்ணனிடம் சொல்லி விஷால் பிலிம் பேக்டரி என்ற நிறுவனத்தை பதிவு பண்ண சொன்னேன். இனிமேல் திறமையான நடிகர்கள், டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து படங்கள் தயாரிப்பேன். செல்லமே படத்தில் நடித்த போது கவிஞர் வைரமுத்து இந்த பையன்கிட்ட ஏதோ இருக்கு நல்லா வருவான் என்றார். அது என் சினிமா வாழ்வுக்கு நல்ல ஆரம்பமாக இருந்தது.
என் கேரியரில் பாண்டியநாடு படம் ரொம்ப முக்கியமானது. பொதுவாக ஹீரோக்கள் எல்லோரும் ஹீரோயினத்தான் லவ் பண்ணுவாங்க, ஆனால் இந்தப்படத்தில் என் அப்பாவாக நடித்துள்ள பாரதிராஜாவைத்தான் நான் லவ் பண்ணினேன். பாண்டியநாடு படத்தில் நான் திக்கி திக்கி பேசும் கேரக்டரில் நடித்ததால் என்னவோ இப்போது இங்கும் நான் திக்கி திக்கி பேசுகிறேன் என்றார்.
Comments
Post a Comment