பூஜாவுக்கு இலங்கையில் விருது!!!

7th of October 2013
சென்னை::ஜே.ஜே., அட்டகாசம், நான் கடவுள்’ ஆகிய படங்களில் நடித்த பூஜா, இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இதனால், தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதும், அவ்வப்போது, சிங்கள மொழி படங்களிலும் நடித்து வந்தார். ‘நான் கடவுள்’ படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த அவருக்கு, தேசிய விருது கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் இயக்குனர் பாலாவுக்கு மட்டும் தான், விருது கிடைத்தது.
 
இந்த படத்துக்கு பின், பூஜாவை தமிழில் பார்க்க முடியவில்லை. ‘திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டாரோ’ என, கோலிவுட்டில் பேச்சு எழுந்தது. ஆனால், சிங்கள மொழி படங்களில், அவர் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது.
 
தற்போது, அவருக்கு, குஷாபாபா’ என்ற சிங்கள மொழி படத்தில் நடித்ததற்காக, இலங்கையின் சிறந்த நடிகை விருது கிடைத்துள்ளதாம். இதனால், ‘நான் கடவுள் படத்தில் விருது கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்திருந்தேன். இப்போது, அந்த ஏக்கம் தீர்ந்து விட்டது’ என்கிறார், பூஜா.

Comments