21st of October 2013
சென்னை::பிரபல சேனல் ஒன்றில் வெளிவரும் நாளைய இயக்குனர் தொடர் ரொம்பவே ஃபேமஸ். இதில் கலந்து கொண்டு நல்ல ஷார்ட் பிலிமுக்காக அவார்டு வாங்கும் இயக்குனர்களை அப்படியே கொத்திக் கொண்டு போய்விடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள். நாளுக்கு நாள் இந்த தொடரை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டிருப்பதால், மற்ற சேனல்களுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தருகிற ஆசை வந்திருக்கிறது.
விரைவில் வரப்போகும் ஒரு புதிய சேனல், இப்படியொரு நிகழ்ச்சியை தயாரிக்க உள்ளது. அதற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறாராம் கவுதம் மேனன். இந்த சுற்றில் வெற்றி பெரும் ஷார்ட் பிலிம் இயக்குனர்களுக்கு சம்பந்தப்பட்ட சேனலே முழு படத்தையும் இயக்கும் வாய்ப்பை வழங்கப் போகிறதாம். அப்படி வழங்கப்படும் தொகை கவுதம் மேனன் மேற்பார்வையில் வழங்கப்படும். அவரே லைன் புரட்யூசராகவும் இருப்பார் என்று கூறப்படுகிறது. கவுதம் மேனன் ஸ்டைலில் ஏராளமான இளைஞர்கள் திரைக்கு வருவது திரையுலகத்திற்கே ஆரோக்கியமான விஷயம்தான். அடிச்சு பட்டைய கிளப்புங்க இளைஞர்களே
Comments
Post a Comment