5th of October 2013
சென்னை::12பி படத்தில் தனது சினிமா கேரியரை தொடங்கியவர் ஷாம். நடிக்க வந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டபோதும், இன்னமும் அவர் சாக்லேட் ஹீரோ அந்தஸ்திலேயே இருக்கிறார். அதோடு தமிழில் நடித்த படங்கள் தொடர் தோல்வியை கொடுக்கவே தெலுங்குக்கு சென்று வில்லனாக அவதரித்தார். ஆனபோதும் அவருக்கு அதில் திருப்தி இல்லை.
அதனால், மீண்டும் தமிழுக்கு வந்து 6 மெழுகுவர்த்திகள் என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார். அந்த படத்துக்காக 2 வருடங்களாக தனது உடம்பை வருத்தி நடித்திருந்தார் ஷாம். படமும் பேசப்பட்டது என்றபோதும் அவர் எதிர்பார்த்தபடி ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை. என்றாலும் திருப்தியாகவே இருக்கிறது என்கிறார் ஷாம்.
மேலும், இந்த படத்தில் ஷாமின் நடிப்பைப்பார்த்த அவரது மனைவி முதன்முறையாக மனதார பாராட்டியுள்ளாராம். அதோடு மீண்டும் சாக்லேட் ஹீரோ கதைகளில் நடிக்காமல் இதே மாதிரி நல்ல கதைகளாக தேடிப்பிடித்து நடியுங்கள். வருடத்துக்கு ஒரு படம் வந்தாலும் போதும் என்று கருத்து சொல்லியிருக்கிறாராம்.
மனைவியின் பாராட்டுதலோடு கூடிய கருத்தினையும் ஏற்றுக்கொண்டுள்ள ஷாம், இனி அழுத்தமான கதைகளில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். அதையடுத்து தன்னை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும் கதைகளுக்காக தினமொரு டைரக்டர் வீதம் தனது அலுவலகத்துக்கு வரவைத்து தீவிரமாக கதை கேட்டுக்கொண்டிருக்கிறார்.
Comments
Post a Comment