இனிமே என் படங்களில் தம்மடிக்கிற சீன்கள் இருக்காது: இயக்குனர் ராஜேஷ்!!!

12th of October 2013
சென்னை::இனிமே என் படங்களில் தம்மடிக்கிற சீன்கள் இருக்காது என்று இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்து காமெடி படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர்தான் ராஜேஷ். இதுவரை இவர் இயக்கிய மூன்று படங்களிலும் பார் சீன்கள் முக்கிய பங்கு வகிக்கும். காரணம், இவருடைய படங்கள் அனைத்தும் இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்படுவதால் தண்ணி, தம்மு இவை இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றன.
இதனிடையே தீபாவளியை முன்னிட்டு ராஜேஷ் இயக்கிய ஆல் இன் ஆல் அழகுராஜா படம் திரைக்கு வரவிருக்கிறது. ஆனால் இந்தப் படத்துல தம்மடிக்கிற சீன் கிடையாதாம்.
 
இது குறித்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ராஜேஷ் கூறியதாவது: ” இந்தப்படத்துலேயும் தம்மடிக்கிற, தண்ணியடிக்கிற சீன்ஸ் இருக்குமா?ன்னு நெறைய பேர் கேட்டாங்க, அந்தளவுக்கு என்னோட படம்னாலே அதுல இந்த ரெண்டுமே இருக்கும்னு முடிவு பண்ணிடுறாங்க.
ஆனா நல்லவேளையா இந்தப்படத்துல தம்மடிக்கிற சீன்ஸ் ஒண்ணு கூட இல்ல, ஏன்னா கதைப்படி அந்தக்காட்சி தேவைப்படல. அதுமட்டுமில்லாமல் இனிமே என்னோட படங்கள்ல தம்மடிக்கிற சீன்களே இருக்காது” என்றார் அவர்.
 
அம்மாவையே சிரிக்க வெச்சுட்டார் இயக்குனர் ராஜேஷ்: கார்த்தி பெருமிதம்!
 
பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மூலமாக எங்க அம்மாவையே சிரிக்க வெச்சுட்டார் ராஜேஷ் என்று கார்த்தி கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக கார்த்தி-காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராஜேஷ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.
 
இதையொட்டி ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் கார்த்தி, ராதிகா ஆப்தே, சரண்யா பொன்வண்ணன், இயக்குனர் ராஜேஷ், தயாரிப்பாளர் டி.ஞானவேல்ராஜா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, ரொம்ப சந்தோஷமா ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கோம்கிற தைரியத்துல இந்த மேடையில பேசுறேன். கண்டிப்பா இந்தப்படம் உங்களை ஏமாத்தாது. நல்லா ஜாலியா உட்கார்ந்து படத்தை பார்த்து ரசிக்கலாம். டைரக்டர் ராஜேஷின் ‘சிவா மனசுல சக்தி’ படம் பார்த்தபோதே அதுல ஜீவாவோட ஆக்டிங்கை பார்த்து மிரண்டுட்டேன்.
அதுமட்டுமில்லால எங்க அம்மா எந்தப்படம் பார்த்தாலும் சிரிக்கவே மாட்டாங்க, அப்படிப்பட்ட அவங்களையே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல சிரிக்க வெச்சுட்டார் ராஜேஷ். அப்போதே எப்படியாவது இவர் கூட ஒரு படம் கண்டிப்பா பண்ணிடனும்னு டிசை பண்ணிட்டேன். அது இந்தப்படத்தின் மூலமா நிறைவேறியிருக்கு.
 
இந்த படத்தில் 80-களில் வர்ற பிரபு சார் கெட்டப்புல நீங்க நடிக்கணும்னு டைரக்டர் ராஜேஷ் என்கிட்ட சொன்னார். முதல்ல சூப்பரா பண்ணிடலாம்னு சொன்னேன். ஆனா ஷூட்டிங் நாள் நெருங்க நெருங்க பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறது மாதிரி பயம் வந்துடுச்சு.
 
இந்தப்படத்துல ஒரு பரதநாட்டியம் டான்ஸ் ஆடியிருக்காங்க, அதை நீங்க பாருங்க சான்ஸே இல்லை அப்படி ஒரு டான்ஸ் அது.டைரக்டர் ராஜேஷ் மேல இருக்கிற நம்பிக்கையிலெ சொல்றேன். இந்தப்படம் கண்டிப்பா ஹிட்டாகும், ரசிகர்களுக்கு பிடிக்கும். என இவ்வாறு தெரிவித்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு வழக்கம் போல காஜல் அகர்வால், சந்தானம் வரவில்லை.

Comments