30th of October 2013
சென்னை::நடிகை பிரியாமணிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக முடிவு செய்துள்ளாராம்.
பிரியாமணிக்கு தமிழில் படங்கள் இல்லை. கன்னட படமொன்றில் நடிக்கிறார். மலையாள படத்துக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அவருக்கு தற்போது 29 வயது ஆகிறது. எனவே இளம் ஹீரோக்கள் ஓரம் கட்டுகிறார்கள். பழைய மாதிரி பெரிய படங்கள் அமையவில்லை. எனவேதான் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.
டாக்டர், என்ஜினீயர், தொழில் அதிபர் போன்றவரின் ஜாதகங்களை வாங்கி வைத்து பெற்றோர் பொருத்தம் பார்த்து வருகிறார்கள். மாப்பிள்ளை முடிவானதும் உடனடியாக திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment