எமி ஜாக்சனுக்கு ஆதரவு திரட்டும் ஆர்யா!!!

8th of October 2013
சென்னை::ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்துக்காக ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியானவர் எமி ஜாக்சன். ஹாலிவுட் படங்களில் டூ-பீஸ் என துக்கடா காஸ்டியூம்களை அணிந்து நடித்துக்கொண்டிருந்த எமியை, தனது படத்தில் அவருக்கு கெளரவம் சேர்க்கும் வகையில் டீசன்டான மாடர்ன் காஸ்டியூம் அணிந்து நடிக்க வைத்தார் டைக்டர் ஏ.எல்.விஜய்.

அதன்பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக் மற்றும் தாண்டவம் படங்களிலும் நடித்த எமி, தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் விக்ரமுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட எமி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்து விட்டது என்கிறார்கள். ஆனால், இந்த படத்தில் நடிக்கும்போதே அடுத்தடுத்து கோலிவுட்டின் மேல்தட்டு ஹீரோக்களின் படங்கள் தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த எமிக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

காரணம், இதுவரை புதிய படங்கள் சம்பந்தமாக யாருமே அவரை தொடர்பு கொள்ளவில்லையாம். அதனால் மீண்டும், மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்யிடம் தனக்கு சான்ஸ் தருமாறு கேட்டுக்கொண்டு வரும் எமிஜாக்சன், இன்னொரு பக்கம் ஆர்யாவையும் துரத்துகிறாராம். அழகான நடிகைகள் உதவி என்று கேட்டால், உயிரைக்கொடுத்தேனும் அதை நிறைவேற்றக்கூடிய இளகிய மனம் படைத்தவரான ஆர்யாவும், தனது புதிய படங்கள் மட்டுமின்றி தனது அபிமானிகள் நடிக்கும் படங்களிலும் எமிக்கு சான்ஸ் கேட்டு ஆதரவு திரட்டிக்கொண்டிருக்கிறாராம்.

Comments