சற்குணம்-நஸ்ரியா சமரசம் - முடிவுக்கு வந்தது தொப்புள் பிரச்னை!!!

10th of October 2013
சென்னை::நய்யாண்டி’ படம் தொடர்பாக நடிகை நஸ்ரியாவுக்கும், டைரக்டர் சற்குணத்திற்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால் தொப்புள் பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தமிழில் வளர்ந்து வரும் நடிகை நஸ்ரியா நசீம். நேரம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் சமீபத்தில் வெளிவந்த ராஜா ராணி படத்திலும் நடித்து இருந்தார். தற்போது சற்குணம் இயக்கத்தில், தனுஷ் ஜோடியாக நய்யாண்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 11ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் நடிகை நஸ்ரியா, இப்படத்தில் வரும், "இனிக்க இனிக்க..." பாடல் காட்சிகளில், நஸ்ரியா நசீம்,"தொப்புள் தெரிய கவர்ச்சியாக நடித்த காட்சி விளம்பர டிரெயிலராக வெளியிடப்பட்டது. இதைப் பார்த்த நஸ்ரியா, "நான் தொப்புள் தெரியும் படி நடிக்கவில்லை. வேறொரு பெண்ணை, டூப் போட்டு நடிக்க வைத்து, கவர்ச்சிக் காட்சியை பட விளம்பரத்தில் சேர்த்து, இயக்குனர், மோசடி செய்து விட்டார். நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளேன்; சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்,’’ என கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுத்தார். ஆனால் இதுபற்றி சற்குணத்திடம் கேட்டால் நஸ்ரியா, சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லி வருவதாக சொன்னார்.

இந்நிலையில் சென்னை போர்பிரேம்ஸ் தியேட்டரில் இன்று(அக்., 9ம் தேதி) நய்யாண்டி படம் திரையிட்டு காட்டப்பட்டது. இதனை நடிகை நஸ்ரியா, அவரது தந்தை, வக்கீல் மற்றும் சைபர்கிரைம் போலீஸார் ஆகியோருடன் சற்குணம் மற்றும் நய்யாண்டி படத்தின் தயாரிப்பாளரும் பார்த்தனர். அதில் நஸ்ரியா, கவர்ச்சி என்று சொல்லும் காட்சி, கவர்ச்சியாக இல்லை என்பதோடு, டூப் யாரையும் பயன்படுத்தவில்லை என்பதும் தெளிவானதாம். மேலும் அந்த தொப்புள் காட்சி டி‌ரெயிலரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாம். இதனால், நஸ்ரியா தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து சற்குணத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்டாராம். மேலும் இதுதொடர்பாக இன்று மாலை 7 மணியளவில் பத்திரிகையாளர்களையும் சந்தித்து பேச உள்ளார்.

இதனையடுத்து ஒருவழியாக தொப்புள் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

Comments