தீபாவளி பண்டிகை: தியேட்டர்களில் 5 காட்சி திரையிட அரசு அனுமதி!!!

31st of October 2013
சென்னை::தீபாவளிக்கு தியேட்டர்களில் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 2013 நவம்பர் மாதம் 4.11.2013 முதல் 8.11.2013 ஆகிய தேதிகளில் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது 5 காட்சி நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

மேலும் 2013 நவம்பர் மாதம் 2.11.2013 மற்றும் 3.11.2013 ஆகிய தேதிகள் அரசு விடுமுறையானதால் அன்றைய தேதிகளிலும் காலை 9 மணிக்கு அதிகப் படியாக ஒரு காட்சி நடத்திக் கொள்ளலாம். அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம்.

அது போல் நடமாடும் திரையரங்குகள் 4.11.2013 தேதி முதல் 8.11.2013 ஆகிய தேதி வரைக்கும் மேட்னி காட்சி 2.45 மணிக்கும் நடத்திக் கொள்ளவும் 2.11.2013 மற்றும் 3.11.2013 ஆகிய தேதிகளில் காலைக் காட்சிகள் காலை 9.30 மணிக்கும் நடத்திக் கொள்ளவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதிகப்படியான காட்சிகள் நடத்த இருப்பது குறித்து முன் கூட்டியே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கும் முன் கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு அதிகப் படியான காட்சியை நடத்திக் கொள்ளலாம்.

மேலும் தமிழக அரசின் சினிமா நிபந்தனை எண். 14–ன்படி காலை 9.00 மணி முதல் இரவு 1.30 மணிவரை மட்டுமே காட்சிகளை நடத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments