சென்னை::சிங்கம்–2’ படத்துக்குப்பின் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இதற்காக ரூ.5 கோடி அட்வான்ஸ் வாங்கினார். ஆறு மாதங்களாகியும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. கவுதம்மேனன் திருப்தி அளிக்கும் வகையில் முழு கதையையும் தயார் செய்யவில்லை என்று கூறி அப்படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார்.
ஏற்கனவே 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படத்தை கவுதம்மேனன் துவங்கி எட்டுமாதம் காத்திருந்தும் அந்த படம் நடக்கவில்லை என்றும் இந்த படத்துக்கும் அதே அனுபவம் ஏற்பட்டுள்ளது என்றும் சூர்யா கூறினார். இருவரும் இந்த படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது என்பதால் விலகுகிறேன் என்றும் சூர்யா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து கவுதமிடம் இருந்து வாங்கிய ரூ.5 கோடியை சூர்யா திருப்பி கொடுத்தார். இருவரும் சமரசமாக பிரிந்தார்கள். கவுதம் பிடித்தமான கதையை தயார் செய்ததும் அவர் படத்தில் நடிப்பேன் என்று சூர்யா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments
Post a Comment