24th of October 2013
சென்னை::கடந்தாண்டை போலவே இந்த தீபாவளிக்கும் ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது.
காரணம், மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கிறது. அதன்படி, அக்டோபர் 31ம் தேதி அஜீத் நடித்த 'ஆரம்பம்' படமும், நவம்பர் 1ம் தேதி விஷால் நடித்த 'பாண்டிய நாடு' படமும், 2ம் தேதி கார்த்தி நடித்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படமும் ரிலீசாகின்றன.
இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் ஏற்கெனவே புக் ஆகிவிட்டது. எதிர்பார்த்தது போல் ஆரம்பம் படம் அதிக திரையரங்குகளை கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியமான 750 திரையரங்குகளில் 500 திரையரங்குகளை இப்படம் பிடித்துவிட்டது.
இதே திரையரங்குகளில் உள்ள காம்ப்ளக்ஸ்களில் விஷால் நடித்துள்ள 'பாண்டிய நாடு', கார்த்தி நடித்துள்ள 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்கள் வெளியாகின்றன.
அந்த 2 படங்களும் முறையே தலா 300 திரையரங்குகள் வரை புக் செய்துவிட்டன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு துப்பாக்கி, போடா போடி படங்கள் மட்டுமே ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment