50 லட்சம் சம்பளம் கேட்டதால் புது படவாய்ப்பு பறிபோனதா?பிரியா ஆனந்த் பதில்!!!

20th of October 2013
சென்னை::சம்பளத்தை உயர்த்தி கேட்டதால் பிரியா ஆனந்த்துக்கு புதிய படத்தில் ஹீரோயின் வாய்ப்பு பறிபோனது என்று வெளியான தகவலை அவர் மறுத்தார்.
 
எதிர்நீச்சல், வணக்கம் சென்னை படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘பென்சில்’ என்ற படத்தில் நடிக்க பிரியா ஆனந்த்தை அணுகியிருக்கிறார்கள். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது ரூ.50 லட்சம் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு பதிலாக ஸ்ரீதிவ்யா, ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர்.‘
 
அதிக சம்பளம் கேட்டது நிஜமா’ என்று பிரியா ஆனந்திடம் கேட்டபோது கலகலவென சிரித்தார். அவர் கூறுகையில், ‘இது நல்ல தமாஷ். நான் இன்னும் அடுத்த படத்துக்காக எந்த ஸ்கிரிப்ட்டும் கேட்கவில்லை. ஏற்கனவே விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி, அதர்வாவுடன் இரும்பு குதிரை, கவுதம் கார்த்திக்குடன் ‘வை ராஜா வை‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்களில் நடித்து முடிக்கவே இந்த ஆண்டு முழுவதும் பிஸியாக இருப்பேன். இதன் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்தபிறகுதான் புதிய படம் ஒப்புக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.
 
இதற்கிடையில், நான் ஏதோ இஷ்டத்துக்கு சம்பளத்தை உயர்த்தி கேட்டதால் ஹீரோயின் வாய்ப்பை இழந்தேன் என்று சொல்கிறார்கள். அது வதந்திதான்’ என்றார்.

Comments