15th of October 2013
சென்னை::ஒரே நேரத்தில் 5 பிரமாண்ட படங்களில் விஷ்ணு ஒப்பந்தமாகியுள்ளார்.
சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடிக் குழு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதனைத்தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கிய ‘நீர்ப்பறவை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இதன் காரணமாக ஒரே நேரத்தில் 5 பிரபல நிறுவனங்கள், இயக்குனர்களில் படங்களில் விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளார். அதன் விவரங்கள் இதோ...
கலக்குற மாப்புள
ஜிவிஜி ஸ்ரீநாத் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கும் இப்படத்தை ‘எத்தன்’ படத்தை இயக்கிய சுரேஷ் இயக்குகிறார். விஷ்ணு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார்.
முண்டாசுபட்டி
‘பீட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’,‘சூது கவ்வும்’ போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம் இது. ராம் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு ஜோடியாக ‘அட்ட கத்தி’ நந்திதா நடிக்கிறார்.
வீர தீர சூரன்
‘பாண்டிய நாடு’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். விஷ்ணு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. தி நெக்ஸ்ட் பிக் பிலிம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இடம் பொருள் ஏவல்
திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்க, சீனு ராமசாமி இயக்கும் படம். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷ்ணு இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார்.
அடுத்து ‘நான் ராஜாவாக் போகிறேன்’ படத்தைத் தயாரித்த சந்திரன் அடுத்து தயாரிக்கப் போகும் படத்தில் விஷ்ணு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களில் , ஒரே நேரத்தில், பிரபல தயாரிப்பாளர்கள், பிரபல இயக்குனர்களின் படங்களில் நடிக்க விஷ்ணு ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஒரே காரணம், நல்ல கதையைத் தர நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ‘கதையின் நாயகனாக’ விஷ்ணு விஷால் தெரிகிறார் என்பதே.
இப்போது நடந்து கொண்டிருக்கும் தமிழ் ஆண்டு ‘விஜய’ ஆண்டு, அடுத்த வருடம் ‘விஷ்ணு’ ஆண்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை..
Comments
Post a Comment