4th of October 2013
சென்னை::விஜயசேகரன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் 'ரணம்'. இப்படத்தில் ஹர்சன் என்பவர் ஹீரோவாகவும், பூனம்கவுர் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர்.
இவர்களுடன் ஷரத், சுவாசிகா, சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், சுப்புராஜ், அகவொளி கார்த்திகேயன், சுப்ரமணியன், மலேசியா கே.டி.எஸ்.பாஸ்கரன், முருகேஷ், ராதாசரஸ்வதி, சத்யா, மகேஷ், கர்ணா, வெள்ளி முரளி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு பாடல் காட்சியில் ஹீரோ ஹர்சனுக்கும், ஹீரோயின் பூனம்கவுருக்கும் 400 விதமான உடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே பாடல் காட்சியில் கதாநாயகன் – கதாநாயகிக்கு 400 உடைகள் பயன்படுத்தி இருப்பது இதுவே முதன் முறை என்று இப்படத்தின் இயக்குநர் விஜயசேகரன் கூறியுள்ளார்.
"எங்கடா போனே ரோமியோ...என்னடா ஆனே ரோமியோ..." என்ற இந்த பாடலை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கியுள்ளனர்.
பாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு மரியா மனோகர் இசையமைக்கிறார். சினேகன் பாடல்கள் எழுத, ஜே.மகேஷ் கலை துறையை கவனிக்கிறார். அசோக்ராஜா, சங்கர், கிரி ஆகியோர் நடனம் அமைக்க, சுரேஷ அர்ஸ் படத்தொகுப்பு பணியை மேற்கொள்கிறார். அன்பு அறிவி சண்டைப் பயிற்சி அமைக்க, செந்தில்குமார் தயாரிப்பு நிர்வாகத்தை கையாள்கிறார்.
தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள 'ரணம்' படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இம்மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்குகிறது.

Comments
Post a Comment