விஜய், அமலாபால், நடித்த தலைவா படம் 4 தியேட்டர்களில் ஒரு காட்சியாக 50 நாளை எட்டியது!!!

9th of October 2013
சென்னை::விஜய், அமலாபால், நடித்த தலைவா படம் பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு ரிலீசானது. உலகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் தியேட்டர்களில் வெளிவந்தது. தமிழ் நாட்டில் மட்டும் 800 தியேட்டர்கள். படம் ரிலீசாகி இன்று (அக்டோபர் 8) 50 வது நாள். சென்னையில் உள்ள பேபி ஆல்பர்ட், எஸ்கேப், பி.வி.ஆர், தேவி ஆகிய தியேட்டர்களில் மட்டும் தொடர்ச்சியா 50 நாட்கள் ஓடியுள்ளது. அதிலும் 25 வது நாளில் இருந்தே ஒரு காட்சி இரண்டு காட்சிகள்தான் நடந்தது. தற்போது ஒரு காட்சி மட்டுமே காட்டப்படுகிறது.

தமிழ் நாட்டில் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலிருந்தும் படம் வெளியேறி இரண்டாவது ரவுண்ட், மூன்றாவது ரவுண்ட் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே படம் 100 நாளை தொடும் வாய்ப்பே இல்லை. ஒரு வேளை வீராப்புக்காக ஏதாவது ஒரு தியேட்டரில் ஒரு காட்சியாகவே ஓட்டி 100 வது நாள் போஸ்டர் ஒட்டப்படலாம்.

Comments