30th of October 2013
சென்னை::லட்சுமிராய் தற்போது சுந்தர்.சி. இயக்கும் ‘அரண்மனை படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறார். தீபாவளி தினத்தன்றும் அவர் ஷூட்டிங்கில் இருப்பதால் அம்மா செய்த சுவீட் சாப்பிட முடியவில்லையே என ஏக்கத்துடன் தெரிவித்தார். லட்சுமிராயின் இந்த ஏக்கத்தை போக்கும் வகையில் அவருக்கும் பட குழுவினருக்கும் சுந்தர்.சி தீபாவளி ட்ரீட் தர முடிவு செய்திருக்கிறாராம்.
இதுபற்றி அவர் கூறும்போது,‘தீபாவளி என்றால் எங்கள் வீட்டில் சுவீட் தூள் பறக்கும். என் அம்மா விதவிதமான சுவீட் செய்வார். ஒவ்வொரு ஆண்டும் மிஸ் செய்யவே மாட்டேன். இந்த ஆண்டு அரண்மனை ஷூட்டிங்கில் இருப்பதால் அம்மா செய்யும் சுவீட்டை சாப்பிட முடியாமல் போய்விடும். ஆனாலும் ஒரு சந்தோஷம் சக நண்பர்கள், தோழிகளுடன் ஷூட்டிங்கில் இருக்கிறேன். இந்த படத்தில் ஹன்ச¤கா, ஆண்ட்ரியாவுடன் நடிக்கிறேன். இருந்தாலும் எனக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது என்றார்.

Comments
Post a Comment