24th of October 2013
சென்னை::தமிழ்சினிமாவால் தவிர்க்க முடியாத ஹீரோவாகி விட்டார் நடிகர் விஜய் சேதுபதி.
ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தவரை தனது ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக்கியவர் டைரக்டர் சீனு ராமசாமி. அதன்பிறகு விஜய் சேதுபதி நடித்த ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமரா’ என எல்லாப்படங்களுமே ஹிட்டு தான்.
தற்போது, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ரம்மி’, ‘சங்குதேவன்’, ‘இடம் பொருள் ஏவல்’ என கையில் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார். இதனால் தனது சம்பளத்தையும் ரூ. 3 கோடியாக அதிகரித்து விட்டார்.
பொதுவாக விஜய்சேதுபதி நடிக்கும் எல்லா படங்களுமே வித்தியாசமான கதைக்கருவை கொண்டவையாகவும் அதோடு அவை ஹிட் படங்களின் லிஸ்ட்டிலும் சேர்ந்து விடுகிறது.
முன்னணி ஹீரோக்கள் எல்லோருமே வருஷத்துக்கு ஒரு ஹிட் படம் கொடுக்கவே நாக்கி தள்ளிய நிலையில் இருக்க, விஜய் சேதுபதியால் மட்டும் எப்படி ஒரே வருஷத்தில் நான்கைந்து தொடர் ஹிட் படங்களை கொடுக்க முடிகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.
அந்த கம்பசூத்திரம் வேறு ஒன்றுமில்லை. தமிழின் முன்னணி ஹீரோக்கள் பலரும் வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்த கதைகளில் தான் இப்போது விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். அப்படித்தான் அவர் நடித்த எல்லாப் படங்களும் ஹிட்டாகி விடுகின்றன.
ரசிகர்களோட பல்ஸ் தெரிஞ்ச ஹீரோன்னா அது விஜய் சேதுபதி தானோ..?
Comments
Post a Comment