24ஆம் தேதி 'சுட்டகதை' ரிலீஸ்!!!

17th of October 2013
சென்னை::ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்திய லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன், தயாரிப்பில் உருவான பல படங்களில் ஒரு படம் தான் 'சுட்ட கதை'.

முழுக்க முழுக்க காமெடிப் படம் என்றாலும், அதை வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் பாலாஜி, வெங்கி, லஷ்மிபிரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்.எஸ்.சிவாஜி, லஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். சுபு என்ற புதுமுகம் இயக்கியுள்ளார்.

இப்படம் வரும் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகிறது.

Comments