28th of October 2013
சென்னை::ரஜினியின் கோச்சடையான், கமலின் விஸ்வரூபம் 2 ஒரே நாளில் ரிலீசாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கியுள்ள படம் கோச்சடையான். இப்படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பட வேலைகள் இன்னும் முழுமை அடையவில்லை. இம்மாதம் ஆடியோ ரிலீஸ¢ என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. இதனால் பட ரிலீஸ் டிசம்பர் 3வது வாரத்துக்கு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது.
கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜரூராக நடக்கிறது. படத்தின் டிரெய்லரும் ரெடியாகிவிட்டது. அடுத்த மாதம் டிரெய¢லர் மற்றும் பாடல் சிடி வெளியீடு ஒன்றாக நடைபெற உள்ளது. இந்த படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளாராம்.
ரஜினிகமல் படங்கள் டிசம்பரில் வெளியாகலாம் என தெரிந்ததும் வினியோகஸ்தர்கள் படு குஷியாகியுள்ளனர். இந்த இரு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் என வினியோகஸ்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்களாம். வழக்கமாக இப்போதைய பிசினஸ் டிரெண்டுக்கு, ஒரே நாளில் 2 பெரிய படங்கள் வருவதை பெரும்பாலும் வினியோகஸ்தர்கள் விரும்புவதில்லை. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக ரஜினிகமல் படம் ஒரே நாளில் வெளியாக வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு காரணம், மற்ற பெரிய ஹீரோக்கள் படங்களுக்கும் ரஜினிகமல் படங்களுக்கும் இருக்கும் வித்தியாசம்தான். ஒரே நாளில் 2 பெரிய ஹீரோவின் படம் வெளிவந்தாலும் தொடர்ந்து 10 நாட்களுக்கு தியேட்டர்கள் நிரம்பி வழியாது. 2 படத்தில் எது நன்றாக இருக்கிறதோ அதுதான் க்ளிக் ஆகும். ஆனால் ரஜினிகமல் படம் அதுபோல் கிடையாது.
படம் சுமாராக இருந்தாலும் இரண்டுக்குமே பெரிய அளவில் ஓபனிங் இருக்கும். எதிர்பார்ப்புகள் காரணமாக இந்த படங்களை 10 நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓட்டிவிடலாம் என வினியோகஸ்தர்கள் நம்புகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள 700 தியேட்டர்களையும் இந்த இரண்டு படங்களால் மட்டுமே கவர் செய்ய முடியும். மற்ற பெரிய ஹீரோக்களால் அது முடியாது. எல்லா தியேட்டர்களிலும் இந்த படங்கள் ஓடும்போது சுலபமாக லாபம் பார்க்கலாம் என கோலிவுட்டார் கணிக்கிறார்கள்.

Comments
Post a Comment