வடிவேலு 2 வேடங்களில் நடிக்கும் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்துக்கு ரூ.1 கோடியில் அரண்மனை செட்!!!

24th of October 2013
சென்னை::வடிவேலு 2 வேடங்களில் நடிக்கும் படம், ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’. ஜோடியாக மீனாட்சி தீக்ஷித் நடிக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவு. இசை இமான். படம் பற்றி யுவராஜ் தயாளன் கூறியதாவது: மன்னர், தெனாலிராமன் என்ற கேரக்டர்களில் வடிவேலு நடிக்கிறார். படத்தில் காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.

எல்லோரும் ரசிக்கும் படியாக இருக்கும். இரண்டு கேரக்டருக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதற்காக, தனது பாடிலேங்குவேஜை முழுவதுமாக மாற்றி நடித்து வருகிறார் வடிவேலு. காமெடியை தாண்டி, பிரமாண்டமாகவும் இருக்கும். படம் பெரும்பாலும் முடிந்துவிட்டது. இன்னும் 20 நாள் மட்டுமே ஷூட்டிங் நடக்க இருக்கிறது. இதற்காக ஏவிஎம்மில் 1 கோடி ரூபாய் செலவில் அரண்மனை செட் தயாராகி வருகிறது. ஆர்ட் டைரக்டர் பிரபாகரின் உழைப்பு பேசப்படும். கிராபிக்ஸுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை உருவாக்குகிறோம்.

Comments