ஆரம்பம் மூலம் 18 வருடங்களுக்கு பிறகு ரீ-என்ட்ரியாகும் சுமன் ரங்கநாதன்!!!


27th of October 2013
சென்னை::சுமன் ரங்கநாதனை ஞாபகம் இருக்கிறதா...? தமிழில், ‘புதுப்பாட்டு’, ‘பெரும்புள்ளி’, ‘மாநகரகாவல்’ போன்ற படங்களில் நடித்தவர். பின், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கினார். துவக்கத்தில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த சுமா, பின் பாலிவுட்டே கொண்டாடும் கவர்ச்சி நடிகையாக மாறினார். இந்நிலையில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சுமன் ரங்கநாதன்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் நடித்துள்ள ‘‘ஆரம்பம்’’ படத்தில் தான் சுமா, ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். ஆக்ஷ்ன் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ஆரம்பம் படத்தில் சுமாவின் ரோல் ரொம்பவே முக்கியமானதாம். இந்தவேடத்தில் அவரை நடிக்க கேட்டபோது ரொம்பவே முதலில் தயங்கினாராம். பிறகு படத்தில் அஜீத், ஆர்யா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், இந்த ரோல் கண்டிப்பாக உங்களுக்கு ‌பொருத்தமாக இருக்கும் என்று டைரக்டர் சொன்ன பிறகு நடிக்க சம்மதித்தாராம். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பது குறித்து இந்தப்படம் வெளிவந்த பிறகு முடிவு செய்ய இருப்பதாக கூறியுள்ளார் சுமன் ரங்கநாதன்.

Comments