செப்டம்பர் 10ஆம் தேதி ஆலினால் அழகுராஜா இசை வெளியீடு!!!

8th of October 2013
சென்னை::ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல் அகர்வால் நடித்து ஆலினால் அழகுராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு எம்.ராஜேஷ், இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் முதல் முறையாக கார்த்தியுடன் இணைந்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சந்தானமும் நடித்துள்ளார் என்பதால், அந்த எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்ற 'செல்லம் செல்லம்..." ஒரு பாடல் மட்டும் ஏற்கனவே வெளியாகிவிட்டது. தற்போது ரசிகர்களின் பேவரைட் பாடலாக மாறியுள்ள இப்பாடலையடுத்து, படத்தின் அனைத்துப் பாடல்களும் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது.

பாடல் வெளியீட்டு விழா அக்டோபர் 10ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. படம் தீபாவளியன்று வெளியாகிறது.

Comments