மஞ்சப் பையும் மங்களகரமும் இது சிட்டி காதல் பாஸ்!!!

1st of September 2013
சென்னை::வேகமா போயிட்டிருக்கிற நகர வாழ்க்கையில சுயநலமும் பணமும்தான் எல்லோருக் கும் தேவையானதாக மாறிப்போச்சு. பணம் தேடுற வேகத்துல நமக்குத் தெரியாமலேயே சில மனிதர்களையும் சில உணர்வுகளையும் ஏறி மிதிச்சுட்டே போயிட்டிருக்கோம். என்னைக்காவது திடீர்னு திரும்பி பார்த்தா, அந்த மனிதர்கள் அங்க இருப்பாங்களான்னு தெரியலை. அதாவது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்னு சொல்வாங்கள்ல, அதுதான் ‘மஞ்சப் பை’ படத்தோட விஷயம்’’ என்கிறார் அறிமுக இயக்குநர், என் ராகவன். இயக்குநர் சற்குணத்திடம் சினிமா கற்றவர்.

‘‘அவர்ட்ட ‘களவாணி’, ‘வாகை சூட வா’ ஒர்க் பண்ணிட்டு, இப்படியொரு கதை இருக்குன்னு சொன்னேன். ‘நல்லாயிருக்கே... நானே தயாரிக்கிறேன்’னு சொன்னார் சற்குணம். அப்புறம்தான் மற்ற வேலைகள்ல இறங்கினேன். இப்ப லிங்குசாமியோட திருப்பதி பிரதர்ஸுக்கு பர்ஸ்ட் காப்பியில படம் பண்றார். ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. பாடல் மட்டும் பாக்கி’’ என்கிறார் என் ராகவன்.

அதென்ன ‘
கல்யாணப் பத்திரிகை அல்லது கோயில் கொடை, திருவிழா மாதிரி மங்களகரமான விஷயத்துக்குத்தான் கிராமங்கள்ல மஞ்சப் பையை பயன்படுத்துவாங்க. ஆனா, இன்னைக்கு அது கேலிப் பொருளா மாறிப்போச்சு. ‘மஞ்சப் பையை தூக்கிட்டு வந்துட்டான்யா’னு நம்ம காதுபட சினிமா இன்டஸ்ட்ரியில பேசறது வழக்கமாயிடுச்சு. அதுக்கான மரியாதையை சொல்ற படமா இது இருக்கும். அதனால ‘மஞ்சப் பை’னு தலைப்பு வைச்சேன்.

என்ன கதை?
கிராமத்துல இருந்து சென்னைக்கு வர்ற ஹீரோ, இங்க ஐடி கம்பெனியில பெரிய பதவி வகிக்கிறார். ஹீரோ கூடதான் இருப்பேன்னு கிராமத்துல இருந்து சென்னை வர்ற அவரோட தாத்தா, ஹீரோவின் காதலி  இவங்க மூணுபேரையும் சுற்றிதான் கதை நடக்கும். இதுல காமெடி, ரொமான்ஸ், சென்டிமென்ட்னு எல்லாமே இருக்கும்.

தாத்தா கேரக்டருக்கு ராஜ்கிரண் எப்படி சம்மதிச்சார்?
எல்லாரும் இப்படித்தான் கேட்கிறாங்க. நான் அவரை சம்மதிக்க வைக்கலை. படத்தோட கதையை சொன்னேன். பொறுமையா கேட்டார். கொஞ்ச நேரம் பேசவே இல்லை. பிறகு, ‘நான் கண்டிப்பா நடிக்கிறேன். எப்ப ஷூட்டிங்’னு கேட்டார். இந்த கதைதான் அவரை நடிக்க வச்சிருக்கு. ஷூட்டிங் ஆரம்பிச்சதுல இருந்து முடிஞ்சது வரை, அவர் அந்த தாத்தா கேரக்டராவே இருந்தார். ‘பூவே பூச்சூடவா’ படம் பேத்திக்கும் பாட்டிக்குமானதா இருந்துச்சுல்ல, அதுமாதிரி இது தாத்தா  பேரன் கதையா இருக்கும். படம் ரிலீஸ் ஆனா ராஜ்கிரண் கேரக்டர் பேசப்படும்.

விமல், லட்சுமி மேனன் ஜோடி எப்படியிருக்கு?
படத்துல ரெண்டு பேரும் அவ்வளவு அழகா நடிச்சிருக்காங்க. கிராமத்துல இருந்து சென்னையில வந்து இருக்கிற கேரக்டருக்கு விமல் அப்படியே பொருத்தம். லட்சுமி மேனனை இதுவரை பாவாடை, தாவணியிலதான் பார்த்திருக்கோம். இதுல மாடர்னா காட்டியிருக்கோம். கண் மருத்துவம் படிக்கிற பொண்ணு. மார்டன்னு சொன்னாலும் நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி தெரியும். கேரக்டருக்கு ரெண்டு பேரும் அப்படிப் பொருந்தியிருக்காங்க.

ஜிப்ரான் இசையில பாடல்கள் எப்படி வந்திருக்கு?
‘வாகை சூட வா’ பட பாடல்கள் இன்னும் மனசுல அப்படியே பதிஞ்சிருக்கு. அதே போல இதுலயும் சிறப்பான டியூன் கொடுத்திருக்கார். கண்டிப்பா ஹிட் பாடல்களா இருக்கும். ஒளிப்பதிவாளர் மாசானி, இதுல அறிமுகமாகிறார். இதுவும் கவனிக்கும்படியா இருக்கும்.
மஞ்சப் பை?’

Comments