6th of September 2013
சென்னை::ஒரு இயக்குனரின் முந்தைய படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தால் அதற்கடுத்து அவர் இயக்கும் படத்தில் அந்த கெஸ்ட் ரோலில் நடித்தவர் ஹீரோவாக நடிப்பது கோலிவுட்டில் வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில், தற்போது சுந்தர்.சி விஷாலைக்கொண்டு இயக்கியுள்ள மதகஜராஜா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஆர்யா, அடுத்து அவர் இயக்கும் அரண்மனை படத்தில் நாயகனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவரை அரண்மனை படத்தில் சுந்தர்.சியே நாயகனாக நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் கால்சீட் பேச இருப்பதாகவும்தான் கூறப்பட்டு வந்தது. ஆனால், இப்போது அதே செய்தி வேறு மாதிரியாகி விட்டது.
அதாவது, ஆர்யா நடிக்கும் அந்த படத்தில் நடிக்க ஹன்சிகாவிடம் கால்சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய தீயா வேலை செய்யனும் குமாரு படத்திலும், ஆர்யா நடித்த சேட்டையிலும் நாயகியாக நடித்தவர் என்பதால், அவர்களின் அழைப்பை ஹன்சிகா நிராகரிக்கமாட்டார் என்றும் சொல்கிறார்கள். ஒருவேளை ஹன்சிகா கால்சீட் இல்லை என்று டேக்கா கொடுத்து விட்டால், இன்னொரு சாய்ஸாக ஆண்ட்ரியாவின் பெயரையும் பரிசீலனையில் வைத்திருக்கிறார்களாம்.

Comments
Post a Comment