பட வாய்ப்புக்காக போட்டி போடும் மூன்று ஹீரோயின்கள்!!!

20th of September 2013
சென்னை::ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜயகாந்த், சிம்ரன் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ரமணா’ திரைப்படம், ‘வானம்’ இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் பாலிவுட் ஆக்சன் ஹீரோ அக்சய் குமார் நடிக்கிறார்.
 
இந்நிலையில் அவருக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏனென்றால், இலியானா மற்றும் ஸ்ருதிஹாசன் கிட்ட ஏற்கனவே கால்ஷீட் கேட்டிருப்பார் போல. இந்நிலையில், தற்போது அமலா பாலும் இந்தப் பட வாய்ப்புக்காக களத்தில் இறங்கியுள்ளதால், யாரை ஃபிக்ஸ் பண்ணாலாமென்று ஒரே கன்ஃபியூஷனில் இருக்கிறாராம் இயக்குனர்.
 
அதேபோல், தமிழ் ரமணாவில் சிம்ரன், ஆஷிமா என ரெண்டு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். ஹிந்தி வெர்ஷனுக்காக ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால், ஒரு ஹீரோயின் போதுமாம். இதனால் இந்த வாய்ப்பைத் தட்டுவதில், மூன்று ஹீரோயின்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறதாம். ‘சபாஷ் சரியான போட்டி…!’ ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘ரமணா’விற்கு, ‘கப்பர்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். 

Comments