26th of September 2013
சென்னை::ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘சரஸ்வதி சபதம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். மேலும் சத்யன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். முழு நீள காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.சந்துரு இயக்குகிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே இப்படத்தின் தலைப்புக்கான பிரச்சினையும் தொடங்கிவிட்டது. மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த ‘சரஸ்வதி சபதம்’ பக்தி திரைப்படத்தின் தலைப்பில் மக்கள் மனதை புண்படுத்தும் விதமாக விளம்பரத்தோடு புதிதாக ‘சரஸ்வதி சபதம்’ பெயரில் படம் எடுப்பதை தவிர்க்கவேண்டும் என்று சிவாஜி கணேசனின் ரசிகர் மன்றங்கள் இப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
பின் அவர்களுடோடு பேச்சுவார்த்தை நடித்தி சுமூகமாக பேசித் தீர்த்த படக்குழு தற்போது இந்த படத்திற்கு ‘நவீன சரஸ்வதி சபதம்’ என்று பெயரிட்டுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் கே.சந்துரு கூறும்போது, எவரது மனத்தையும் புண்படுத்தாத வகையில் இந்தப் படம் இருக்கும் என்றார்.
இப்படத்திற்கு பிரேம்குமார் என்பவர் இசையமைக்கிறார். இவர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment