18th of September 2013
சென்னை::ஏஸ் மாஸ் மீடியாஸ்’ சார்பில் ஏ.கே.வெற்றிவேலவன், எம்.தேவராஜுலு தயாரிப்பில் உருவாகி வரும் ‘பொறியாளன்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. ‘
உதயம் என்.ஹெச்.4’ படத்தின் இயக்குனர் மணிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் தனுகுமார்.ஹரிஷ் கல்யாண் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் தெலுங்கு நடிகை ரக்ஷிதா. தமிழில் ஆனந்தியாக அறிமுகமாகியிருக்கிறார்.
பிரபுசாலமன் இயக்கும் புதிய படமான ‘கயல்’ படத்திலும் இவர்தான் ஹீரோயின்.இம்மாத இறுதியில் ‘பொறியாளன்’ படத்தின் இசை வெளியீட்டையும், படத்தை அக்டோபரிலும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ரக்ஷிதாவை ஆனந்தியாக மாற்றிய பிரபுசாலமன்!!!
சினிமாவில் இருக்கும் அநேக நட்சத்திரங்களின் பெயர்கள், அவர்களது உண்மையான பெயராக இருப்பது கிடையாது. சினிமாவுக்காக அவர்களது பெயர்களை மாற்றிக்கொள்வர். அதிலும் நடிகைகளின் பெயர்கள் தான் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கும். அந்தவகையில் பிரபுசாலமனால் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு நடிகையின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ரக்ஷிதா, இப்போது தமிழில் ஆனந்தி என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கிறார். கும்கி படத்திற்கு பிறகு பிரபுசாலமன் இயக்கும் கயல் படத்தில் தான் இவர் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பது பற்றி ரக்ஷிதா என்ற ஆனந்தி கூறியிருப்பதாவது, பிரபுசாலமன் தன் புதிய படத்திற்கு ஹீரோயின் தேடி வருவதாக கேள்விப்பட்டேன். பிறகு எனது புகைப்படத்தை பார்த்து தான் பிரபுசாலமன் என்னை நேரில் அழைத்தார். கும்கி படத்தில் லட்சுமி மேனன் நடித்தது போன்று நானும் இவரது படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பிரபுசாலமன் படத்தில் நான் நடிக்க தேர்வாகியுள்ளது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான். பொதுவாக கிராமத்து கதாபாத்திரங்கள் தான் மக்களிடம் வேகமாக சென்று ரீச்சாகும். எனக்கு பிடித்த ரோலும் அதுதான். கயல் படத்தில் எனது ரோலும் அப்படிபட்டது தான். எனது உண்மையான பெயர் ரக்ஷிதா தான், இந்தபடத்திற்காக எனது பெயரை ஆனந்தி என்று பிரபுசாலமன் மாற்றினார். இந்த புதுப்பெயரும் எனக்கு பிடித்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Comments
Post a Comment