கமலின் காட் ஃபாதருக்கு ஹார்ட் அட்டாக்!!!

18th of September 2013
சென்னை::கமல்ஹாசன் திலீப் குமாரின் தீவிர ஃபேன். சிவாஜி அளவுக்கு பிடித்தமானவர். சில விஷயங்களில் சிவாஜியையும் தாண்டி. சிவாஜி உள்பட பலருடன் நடிக்க கமல் விரும்பியிருந்தாலும் அவர் அதிகம் புலம்புவது திலீப் குமாருடன் நடிக்க முடியாமல் போனதை.
 
ஞாயிறு இரவு 90 வயதாகும் திலீப் குமாரை நெஞ்சுவலி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பால்சோதித்த மருத்துவர்கள் மைல்ட் ஹட்ர்ட் அட்டாக், பயப்பட எடுவுமில்லை என தெரிவித்தனர். தற்போது திலீப் குமார் நார்மலாக உள்ளார் எனவும் கூறியுள்ளனர்.
 
திலீப் குமார் நடிகர், சகலகலா வல்லவர். அந்தக்காலத்திலேயே ரஷ்யாவரை இவரது பாடல்கள் பிரபலம். இந்தியாவை திலீப் குமாரை வைத்து அடையாளப்படுத்தும் ரஷ்யர்கள் அவர் நடிக்கும் காலத்தில் அதிகம் இருந்ததாக சொல்லப்படுவதுண்டு. ஃபிக்கி சார்பில் திலீப் குமாருக்கு விருது வழங்கப்பட்டது. கமல் அவரது வீட்டிற்கு கொண்டு வந்து தந்தார். அப்போது தன்னை வரவேற்ற திலீப் குமாரை முழந்தாள் போட்டு அவரது கையில் முத்தமிட்டு மரியாதை செய்தார் கமல்.
 
இதற்கு மேல் கமலின் திலீப் குமார் பக்தியை சொல்வதற்கு எதுவுமில்லை.

Comments