1st of September 2013
சென்னை::ஆக்ஷன் ஹீரோயின் பட்டியலில் இடம் பிடிக்க ஸ்டன்ட் காட்சிகளில் நடிக்கிறார் காஜல் அகர்வால்.அனுஷ்கா, பிரியாமணி ஆக்ஷன் வேடங்களில் நடிக்க ஸ்டன்ட் பயிற்சி பெற்றனர். ‘தலைவா படம் மூலம் போலீஸ் வேடத்தில் நடித்த அமலா பால் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். அந்த பட்டியலில் இடம் பிடிக்கிறார் காஜல் அகர்வால்.
துப்பாக்கி படத்துக்கு பிறகு விஜய் ஜோடியாக ‘ஜில்லா படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இதில் அவர் போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறார். சமீபத்தில் அவர் நடித்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. போலீஸ் யூனிபார்ம் அணிந்து முரடர்களுடன் மோதினார். இது பற்றி காஜல் கூறும்போது,
ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இது இப்படத்தில் நிறைவேறுகிறது. போலீஸ் வேடம் பொருந்துமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கான யூனிபார்ம் அணிந்தபோது எனக்கு வேடம் மிகப்பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறினார்கள் என்றார்.
Comments
Post a Comment